முக்கியச் செய்திகள் தமிழகம்

7 தமிழர்களை விடுவிக்க திருமாவளவன் கோரிக்கை!

கருணாநிதி பிறந்தநாளையொட்டி 7 தமிழர்கள் உள்ளிட்ட நெடுங்காலமாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிடுக்குமாறு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நெருக்கடியை கருத்தில் கொண்டு சிறைவாசிகளை உடனே விடுதலை செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் உரிய வழிகாட்டுதல்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிறைத்துறையினரின் உரிமைகள் உள்ளிட்டவற்றில் முற்போக்கு பார்வை கொண்டிருந்தவர். அவரது பிறந்தநாளையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை காலத்தை கழித்துள்ள இஸ்லாமியர்கள், வயது முதிர்ந்தோர், நோய்வாய்ப்பட்டவர்கள், பிற கைதகள் மற்றும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement:

Related posts

ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் முடிவெடுத்து விட்டனர்: ஸ்டாலின்

Ezhilarasan

இந்தியாவுக்கு உதவ தயார் : பிரிட்டன் பிரதமர்

Karthick

சொமாட்டோ ஊழியரை தாக்கியதாக கூறப்படும் பெண் தலைமறைவா?

Saravana Kumar