தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்கினர்.
தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து நிதி உதவி வழங்கி வருகின்றனர். இதன்ஒரு பகுதியாக சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கொரோனா நிவாரணப்பணிகளுக்காக திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தொகையான ஒரு கோடியே 37 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.







