வரதராஜ பெருமாள் கோவில் திருத்தேர் உற்சவம் தொடங்கியது

வரதராஜ பெருமாள் கோவில், பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று 72 அடி உயர திருத்தேர் உற்சவம் தொடங்கியது. 108 வைணவ திவ்ய தேசங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி…

வரதராஜ பெருமாள் கோவில், பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று 72 அடி உயர திருத்தேர் உற்சவம் தொடங்கியது.

108 வைணவ திவ்ய தேசங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாதம், பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2019-ஆம் ஆண்டு உலகம் போற்றும் வகையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது அத்திவரதர் வைபவம். அதன்பிறகு கொரோன தொற்று காரணமாக கடந்த 2020, 2021 ஆண்டுகளில் வைகாசி மாத பிரம்மோற்சவம் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மே-13 அதிகாலை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது. இந்த பிரம்மோற்சவம் வரும் 22-ஆம் தேதி வரை பத்து நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

அண்மைச் செய்தி: ‘பட்டியலினத்தவர்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி’

பிரம்மோற்சவத்தை ஒட்டி காலை மாலை என இருவேளைகளிலும் வரதராஜப்பெருமாள், தங்க சப்பரம், சிம்மம், ஹம்சம், சூரிய பிரபை, சந்திர பிரபை, யாளி,யானை, குதிரை, உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவான கருடசேவை உற்சவம் கடந்த 15-ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று 72 அடி உயர திருத்தேர் உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.