பட்டியலினத்தவர்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதியுதவி பெற http://www.startuptn.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு SC/ST ஸ்டார்ட் அப் ஃபண்ட் என்பது தமிழ்நாடு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் ஒரு முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது. பட்டியலினத்தவர்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டார்ட் அப் ஃபண்டை, பட்டியலிடப்பட்ட பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த தொழில்முனைவோரால் மட்டுமே இந்த ஃபண்டை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: ‘திமுக சொல்வது கேலிக்கூத்து – எடப்பாடி பழனிசாமி காட்டம்’
அதன்படி, முதற்கட்டமாக முதல் பிரிவுக்கு 30 ஜூன் 2022 வரை விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்பத்தை நிரப்புவதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் கொடுக்கப்பட்டுள்ள இந்த மின்னஞ்சல் முகவரி scstfund@startuptn.in அல்லது 044-22252081/82/83 என்ற எண்ணில் தங்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிதியுதவி பெற http://www.startuptn.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








