10.5 இட ஒதுக்கீட்டை சிறப்பாக நிறைவேற்றுவோம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், வன்னியர்களுக்கான 10.50 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பாக பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு விளக்கமளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10.5% இட ஒதுக்கீடு என்பது எந்த நேரத்தில் கொண்டு வரப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருந்த நாளில், அவசர கோலத்தில் கொண்டு வரப்பட்டதால் தான், நீதிமன்றம் சென்று தடை விதிக்கப்பட்டதாகக் கூறினார்.
இதையும் படியுங்கள் : இந்தியாவின் 2வது K-POP இசைக்கலைஞரானார் கேரளாவின் ஆரியா!
அதிமுக ஆட்சி கொண்டு வந்தது என்பதை பொருட்படுத்தாமல் திமுக ஆட்சியில் அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதிமன்ற தடை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளோம் என்று விளக்கமளித்தார்.