முக்கியச் செய்திகள் சினிமா

ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரி நடிகர் சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ்

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரித்தற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கோரி நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, அமேசான் நிறுவனத்திற்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வன்னியர் சமுதாயத்தை சித்தரித்ததற்காக நடிகர் சூர்யா 7 நாட்களுக்குள் ரூ.5 கோடி அபராதத் தொகை வழங்கக் கோரி வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் வெளியானது. அந்த படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.

இதேபோல், குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தது. இதை தொடர்ந்து இந்த காட்சி மாற்றப்பட்டது. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வன்னியர்களின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தியதற்காக 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும் என்றும், 7 நாட்களுக்குள் 5 கோடி ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை

எல்.ரேணுகாதேவி

கண்ணை இமை காப்பது போல, விவசாயிகளை அதிமுக அரசு காத்துவருகிறது: முதல்வர்!

Gayathri Venkatesan

தமிழ்நாடு அரசின் சார்பில் புதிய திட்டங்கள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

Arivazhagan Chinnasamy