தமிழ்நாட்டில் வேறு எந்த விலங்குகளுக்கும் கொரோனா இல்லை: அமைச்சர் ராமச்சந்திரன்

வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கங்களை தவிர, தமிழ்நாட்டில் வேறு எந்த விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா கொரோனா ஊரடங்கு காரணமாக…

வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கங்களை தவிர, தமிழ்நாட்டில் வேறு எந்த விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள விலங்குகள், ஊர்வனங்களுக்கு பாதுகாக்கவும் போதிய நிதி ஆதாரம் இல்லை என நாளிதழில் செய்திகள் வெளியானது.

இதனையெடுத்து கிண்டி சிறுவர் பூங்காவில் அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். சிறுவர் பூங்காவில் உள்ள 30 வகையான உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிண்டி சிறுவர் பூங்கா சென்னை மக்களின் இதயமாக கருதப்படுவதாகவும், அதன் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயிரியல் பூங்காவிலும் உள்ள வன விலங்குகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கங்களை தவிர, தமிழ்நாட்டில் வேறு உயிரினங்களுக்கு கொரானா தொற்று இல்லை என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.