கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
கொரோனா தொற்றால் தமிழ்நாட்டில் ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். அவர்களுக்கான திட்டங்களை கடந்த மாதம் 29-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்யப்பட்டு, 18 வயது நிறைவடையும்போது வட்டியுடன் வழங்கப்படும் என அரசாணையில் கூறப்பட்டது.
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்க இடம் வழங்கப்படும். பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு உடனடியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டங்களை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.







