கொரோனா நோயாளியைக் கொலை செய்த அரசு மருத்துவமனை பெண் ஊழியர்!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில், பணம் மற்றும் செல்போனுக்காக அவர் கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்தவர் மௌலி. இவங் தனியார் பொறியியல்…

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில், பணம் மற்றும் செல்போனுக்காக அவர் கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது.

சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்தவர் மௌலி. இவங் தனியார் பொறியியல் கல்லூரியில் அலுவலக ஊழியராக பணிப்புரிந்துவருகிறார். இவருடைய மனைவி சுமிதா கடந்த மே மாதம் 23-ம் தேதி கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்னர் மே 24-ம் தேசி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அடுத்த சில நாட்களில் சுமிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாயமானார். தன்னுடைய மனைவியைக் காணவில்லை என மௌலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் கடந்த ஜூன் 8-ம் தேதி சுமிதாவின் உடல் அழுகிய நிலையில் மருத்துவமனையின் 8-வது தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர் ரதிதேவி என்பவரை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 40- வயதான ரதிதேவி சென்னை திருவெற்றியூரில் 22- வயது மகன் மற்றும் மகளுடன் வசித்துவருகிறார்.

ரதிதேவி காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில்“மருத்துவமனையின் மூன்றாவது கோபுரம் கட்டத்தில் உள்ள கொரோனா வார்டில் இருந்து சுமிதாவை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து அவசர மின்தூக்கி மூலம் 8-வது மாடிக்கு சென்றேன். அங்கு சுமிதாவை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்ட அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை எடுத்துக்கொண்டேன். பின்னர் சுமிதாவின் உடலை (EB ROOM-யில் வைத்துவிட்டு 8- வது மாடிக்கு செல்லும் வழியைப் பூட்டிவிட்டு வந்துவிட்டதாக ரதிதேவி வாக்குமூலம் அளித்துள்ளார். கொரோனா நோயாளிகளைப் பிரேதப் பரிசோதனை செய்யாமல் உறவினர்களிடம் ஒப்படைப்பதால், தப்பிவிடலாம் என எண்ணியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.