அரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உதிரிபாகங்கள் ஏற்றிச்சென்ற பிக்கப் வாகன விபத்தில் வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்ட உதவியாளரை தீயணைப்பு துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கொங்கு வேம்பு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கி உதிரிபாகங்கள் ஏற்றிக்கொண்டு பிக்கப் வாகனம் சென்றுகொண்டிருந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வாகனத்தை இயக்கி சென்ற ஓட்டுநர் எவ்வித காயமின்றி உயிர் தப்பினார். ஓட்டுனரின் உதவியாளர் வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டார். . அவரை பொதுமக்கள் மீட்க முயற்சி செய்தனர். இதனை அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று சிறு காயங்களுடன் வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டிருந்தவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





