மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், திருமணமாகி 44 நாட்களே ஆன புதுமணப்பெண் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, உசிலம்பட்டி பட்டறைத் தெருவைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவருக்கும், கீழப்புதூரைச் சேர்ந்த கோபிகா என்பவருக்கும், கடந்தஜூன் 1ஆம் தேதி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்தாக கூறப்படுகிறது.
பட்டறை தெருவில் உள்ள வீட்டில் இருவரும் வசித்து வரும் சூழலில், வெல்டிங் பணி செய்யும் பிரேம்குமார் வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த புதுமணப்பெண் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு, உயிரை மாய்த்துக் கொண்டது அப்பகுதி மக்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கு. பாலமுருகன்.








