வால்பாறை சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிப்பு

அமுல் கந்தசாமி உயிரிழந்ததை அடுத்து வால்பாறை சட்டமன்றத் தொகுதியை காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை அன்னூரைச் சேர்ந்தவர் அமுல் கந்தசாமி (வயது 60). இவர் வால்பாறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில துணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார். இந்த சூழலில், இவர் உடல்நலக்குறைவு காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை திடீரென பின்னடைவை சந்தித்தது.

இதையும் படியுங்கள் : “காங்கிரஸ், விசிகவுக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி

தொடர்ந்து, அமுல் கந்தசாமி கடந்த ஜூன் 21ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு அப்பகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அமுல் கந்தசாமி கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேந்தெடுக்கப்பட்டடார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அமுல் கந்தசாமி உயிரிழந்ததை அடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் வால்பாறை சட்டமன்றத் தொகுதியை காலியானதாக அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.