வள்ளியூர் முருகன் கோயில் சித்திரை தேரோட்டம்- ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அரோகரா என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட…

நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அரோகரா என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட குகைக்கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோயில். இக் கோயிலில் சித்திரை மாதத்தில் நடைபெறும் தேரோட்டம் சிறப்பு வாய்ந்தது. இதற்கிடையே ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை தேரோட்ட திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினந்தோறும் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனனைகள் காட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விழாவின் 9 ஆம் நாளன நேற்று சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் தமிழக சபாநாயகர் அப்பாவு உட்பட ஏராளமான பக்தர்கள் அரோகரா என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரில் சுப்ரமணியசுவாமி, அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

—கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.