மாணவ மாணவிகள், கல்விக் கண்காட்சிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சேலத்தில் நியூஸ்7 தமிழ் நடத்தும் கல்விக் கண்காட்சியை தொடங்கி வைத்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் விதமாக நியூஸ் 7 தமிழ் பிரமாண்ட கல்விக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. கோவையில் இரண்டு ஆண்டுகளாக நியூஸ்7 தமிழ் கல்வி கண்காட்சியை நடத்தியது. அதேபோல், மதுரையில் நடத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கல்விக் கண்காட்சிகளில் முன்னணி கல்வி நிறுவனங்கள் அரங்குகளை அமைத்து, மாணவர்களின் உயர்கல்வி குறித்த சந்தேகங்களை தீர்த்து வைத்ததோடு, உடனடி மாணவர்ச் சேர்க்கையும் நடத்தியது. இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்றனர். மேலும் வங்கிகள் மூலம் கல்விக் கடன் பெறுவதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதையும் படியுங்கள் : சேலத்தில் நியூஸ்7 தமிழ் நடத்தும் கல்விக் கண்காட்சியை தொடங்கி வைத்தார் இபிஎஸ்
இந்த ஆண்டு சென்னையிலும், சேலத்திலும் நியூஸ்7 தமிழின் மாபெரும் கல்வி கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. சேலத்தில் நடைபெறும் கல்வி கண்காட்சியை, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நியூஸ் 7 தமிழ் ஏற்பாடு செய்துள்ள உயர்கல்வி வழிக்காட்டி என்பது அற்பதமான ஏற்பாடு. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவிகள் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றை காலம் விஞ்ஞான உலகம். கல்வியில் எப்படியாவது உயர வேண்டும் என நினைக்கின்றனர்.
அதிமுக ஆட்சி காலத்தில் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டது. கலைக்கல்லூரி , 11 மருத்துவக் கல்லூரி , சட்டக் கல்லூரி என உயர்கல்விக்கான பல கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்து உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. தமிழகத்தில் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு அறிவித்து சட்டமாக்கிய பின், இதுவரை 454 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, கல்விக் கண்காட்சியை தொடங்கி வைத்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிசாமிக்கு நியூஸ் 7 தமிழ் சார்பில், நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல் நினைவு பரிசு வழங்கினார்.