கும்பகோணம் , அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடான
சுவாமிமலையில், பங்குனி உத்திர திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று
காலை வள்ளி தினைப் புலம் காத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கும்பகோணம் , முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் நான்காம் படை
வீடாக விளங்குவது சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலாகும்.
இந்த ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் ஒரு பகுதியாக இன்று காலை வள்ளி தினைப்புலம்
காத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், வள்ளி திணை சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலில் காவல் பணியில்
ஈடுபட்டிருந்த பொழுது, யானை வடிவம் கொண்ட விநாயகர் விரட்டும் நிகழ்வு
நடந்தது. அதனைத் தொடர்ந்து , முருக கடவுள் வள்ளியை காக்கும் நிகழ்வு
சுவாமிமலை அருகே அரசலாற்றில் இன்று அதிகாலை நடைபெற்றது.
இந்த நிகழ்வை காண ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.
கு.பாலமுருகன்
KMB SWAMIMALAI ELEPHANT RUNNING.







