முக்கியச் செய்திகள் சினிமா

பட விழாவில் காதலை சொன்ன ’வலிமை’ வில்லன்

திரைப்பட விழா மேடையில் ’வலிமை’ பட நடிகர், தன் காதலை வெளிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தெலுங்கு ஹீரோ கார்த்திகேயா. இவர் RX 100 என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர், அஜித்தின் ’வலிமை’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். படப்பிடிப்பில் அஜித்துடன் அவர் இருக்கும் புகைப் படங்கள் சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வைரலாயின.

நடிகர் கார்த்திகேயா இப்போது ’ராஜ விக்ரமார்கா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் இப்போது நடந்து வருகிறது. ஐதரபாத்தில் நேற்று நடந்த இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஷாக் கொடுத்தார், கார்த்திகேயா.

விழாவுக்கு, தனது நீண்ட நாள் காதலி லோகிதாவை அழைத்து வந்திருந்த கார்த்திகேயா, பத்திரிகையாளர்கள் முன்பு, தரையில் முட்டிப் போட்டு அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். இதையடுத்து அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார் லோகிதா.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வரும் 21 ஆம் தேதி லோகிதாவை தான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகத் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

இளம்பெண் சரஸ்வதி கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் : வேல்முருகன்

Halley karthi

கேரளாவில் பினராயி விஜயன் அரசு 20 ஆம் தேதி பதவியேற்பு!

Halley karthi

மீண்டும் இணையும் தனுஷ்- மாரி செல்வராஜ் வெற்றிக் கூட்டணி!

Halley karthi