முக்கியச் செய்திகள் இந்தியா

அத்வானிக்கு பிறந்த நாள்: பிரதமர், குடியரசுத் துணைத் தலைவர் நேரில் வாழ்த்து

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான அத்வானிக்கு, பிரதமர் மோடி நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான அத்வானிக்கு இன்று 94-வது பிறந்த நாள். இதையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், மந்திரி அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் டெல்லியில் உள்ள அத்வானியின் இல்லத்திற்கு சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் அனைவரும் அத்வானியுடன் அமர்ந்து சிறிது நேரம் கலந்துரையாடினர். பின்னர் அவர் இல்லத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “மரியாதைக்குரிய அத்வானிஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு பிரார்த்திக்கிறேன். மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும், நம் கலாசாரப் பெருமையை மேம்படுத்துவதற்காகவும் அவர் செய்த முயற்சிகளுக்காக தேசம் கடமைப்பட்டிருக்கிறது. அவர் அறிவார்ந்த நோக்கங்களுக்காகவும், வளமான அறிவாற்றலுக்காகவும் மதிக்கப்படுகிறார்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியால் மாநிலங்களவையில் 40 மணி நேர அலுவல்கள் பாதிப்பு

Ezhilarasan

சென்னையில் எவ்வளவு படுக்கை வசதிகள் உள்ளது தெரியுமா?

Ezhilarasan

முழு ஊரடங்கு அமல்!

Ezhilarasan