மனித உயிர்கள் அவசியம்: அஜித் ரசிகர்கள் ட்வீட்

வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படம் உருவாகி உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.…

வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படம் உருவாகி உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் 50 சதவிகிதம் பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இரவு காட்சிகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல், மனிதர்கள் உயிர் அவசியம் என்பதை கருதி அரசாங்கம் எடுக்கும் முடிவிற்கும் முழு ஒத்துழைப்பை வழங்குவோம்  எனவும்  ’பாதுகாப்புடன் இருங்க மக்கா ‘,  ’ படம் எப்போனாலும் பார்க்கலாம் ஆனா அத பார்க்க நாம இருக்கணும்’ எனவும் அஜித் ரசிகர் மாவட்ட மன்றங்கள் சார்பாக ட்வீட் செய்துள்ளனார்.

இது குறித்து நடிகர் ஆரி தனது ட்விட்டர் பக்கத்தில்  வலிமை படம் ரிலீஸ் ஏமாற்றமளித்தாலும் 3வது அலை ஆரம்பமாகியுள்ளது அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.

பொதுவாக பெரிய ரசிகர்கள் படம் வெளியாவதில் ஏதேனும் தாமதம் எனும் பட்சத்தில் ரசிகர்கள் கொந்தளிப்பது வழக்கம் ஆனால் நேற்று படக்குழுவின் அறிவிப்பையடுத்து சூழலின் தன்மை கருதி மிக நாகரீகமாக அஜித் ரசிகர்கள் நடந்து கொண்டது இணையவாசிகளால் பேசுபொருளாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.