யூரோ கோப்பை கால்பந்து தொடர் அரையிறுதிப்போட்டி நடைபெற்ற மைதானத்தில் ரசிகர் ஒருவர் ‘வலிமை அப்டேட்’ என எழுதப்பட்டிருந்த பதாகையுடன் நின்றிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள வலிமை படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள், தொடர்ந்து சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை சேப்பாக்கம் மைதானம் தொடங்கி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்ற மைதானம் வரை எங்கும் ‘வலிமை அப்டேட் வேண்டும்’ என்றவாறு அஜித் ரசிகர்களின் குரல் ஒலித்து வருகிறது. இந்நிலையில், தற்போது யூரோ கோப்பை அரையிறுதிப்போட்டி நடைபெற்ற லண்டன் வெம்ப்ளி மைதானத்திலும் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் என எழுதப்பட்டிருந்த பதாகையை ஏந்தி நின்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதனை டுவிட்டரில் பகிர்ந்த அஜித் ரசிகர்கள், வலிமை திருவிழா என்ற ஹேஷ்டேக்கில் தங்கள் கருத்துகளை பகிர, அந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கிலும் இடம்பெற்றுவிட்டது.