முக்கியச் செய்திகள் உலகம்

இலங்கையின் நிதியமைச்சரானார் அதிபரின் சகோதரர்

இலங்கையின் புதிய நிதியமைச்சராக பசில் ராஜபக்ச பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

அதிபர் மகிந்த ராஜபக்சே மற்றும், பிரதமர் கோத்தபய ராஜபக்சே ஆகியோரின் சகோதரரான பசில் ராஜ பக்ச இன்று நிதியமைச்சராக அதிபர் மற்றும் பிரதமர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

அமெரிக்கா மற்றும் இலங்கை என இரட்டைக் குடியுரிமையை கொண்டுள்ள பசில் ராஜபக்ச இலங்கையின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனமாகி அதனையடுத்து நிதியமைச்சராக பதவியேற்றுக்கொண்டுள்ளார். தற்போது நாடு முழுவதும் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், பசில் ராஜபக்சேவின் பதவியேற்பு நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

பசில் ராஜபக்ச சார்ந்திருக்கும் பொதுஜன பெர்முனே கட்சியின் ஜயந்த கெட்டகொட எனும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகியதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக பசில் ராஜபக்சே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் 196 பேர் தேர்தல் மூலமும், ஏனைய 29 இடங்கள் நியமனம் மூலமாகவும் நிரப்பப்படுகிறது. அதன்படி பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

சென்னை; மழை நீரில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Halley karthi

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் பொன்முடி

Ezhilarasan

நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் தனித்து போட்டி!

எல்.ரேணுகாதேவி