அஜித்தின் ‘வலிமை’ படக் காட்சிகள் திருடப்பட்டவை- குறும்பட இயக்குநர் பரபரப்பு புகார்

வலிமை படத்தின் காட்சிகள் என்னுடைய குறும்படத்தில் இருந்து திருடப்பட்டது என ஓராண்டுக்குப் பின் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திரைப்பட இயக்குநர் புகார் அளித்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “துணிவு”.…

வலிமை படத்தின் காட்சிகள் என்னுடைய குறும்படத்தில் இருந்து திருடப்பட்டது என ஓராண்டுக்குப் பின் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திரைப்பட இயக்குநர் புகார் அளித்துள்ளார்.

நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “துணிவு”. எச்.வினோத் இயக்கத்தில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எச்.வினோத் “துணிவு” படத்திற்கு முன்பு அஜித்தை வைத்து “வலிமை” படத்தை இயக்கினார். 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்த படம் தொடர்பாக தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கவும்: கேஜிஎஃப்-2 வசூல் சாதனையை முறியடித்த ‘பதான்’!

குறும்பட இயக்குநர் ராஜேஷ் ராஜா என்பவர் கொடுத்துள்ள புகாரில், தான் இயக்கிய குறும்படத்தில் இருந்து 10 காட்சிகளை திருடி இயக்குநர் எச்.வினோத் இயக்கிய வலிமை படத்தில் வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டி உள்ளார். “வலிமை” திரைப்படத்தில் அஜித்தின் தாயாராக நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் கண்ணில் காயம் ஏற்பட்டிருக்கும் காட்சியும், செயின் பறிப்பு காட்சி உள்ளிட்ட 10 காட்சிகள் குறும்படத்தில் இருக்கும் காட்சியும் ஒற்றுமையாக இருக்கிறது. ஹெச்.வினோத் தனது குறும்படத்தில் இருந்து திருடியதாக புகாரில் ராஜேஷ் ராஜா குறிப்பிட்டுள்ளார்.2022ம் ஆண்டு வெளியான வலிமை படத்தின் காட்சிகள் தன்னுடைய குறும்படத்தின் காட்சிகள் என குறும்பட இயக்குநர் ராஜேஷ் ராஜா ஒரு ஆண்டிற்கு பிறகு தற்போது புகார் கொடுக்க என்ன காரணம் என கேள்வி எழுகிறது. புகார் கொடுக்கும் போது காவல்துறையினரும் இதே கேள்வியை எழுப்பினர். தான் நடிகர் விஜய் ரசிகர் என்றும், அஜித் படங்களை தான் பார்ப்பதில்லை என்றும் புகார் கொடுத்துள்ள குறும்பட இயக்குனர் ராஜேஷ் ராஜா கூறியுள்ளார்.

கதை திருட்டு போல் காட்சிகளை திருடிய ஹெச்.வினோத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அடுத்த கட்டமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளாதாகவும் குறும்பட இயக்குநர் ராஜேஷ் ராஜா தெரிவித்துள்ளார். இவர் அளித்த புகாரை காவல்துறையினர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.