வாஜ்பாயும், கருணாநிதியும் உயர்ந்த நண்பர்கள்- முரசொலி விளக்கம்

வாஜ்பாயும், கருணாநிதியும் உயர்ந்த நண்பர்கள். 1999ல் திமுக – பாஜக கூட்டணி குறித்து முரசொலி விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து முரசொலி விளக்கம் அளித்துள்ளது. அதில், ஜெயலலிதா திமுக ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தன் மீதுள்ள பயங்கரமான…

வாஜ்பாயும், கருணாநிதியும் உயர்ந்த நண்பர்கள். 1999ல் திமுக – பாஜக கூட்டணி குறித்து முரசொலி விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து முரசொலி விளக்கம் அளித்துள்ளது. அதில், ஜெயலலிதா திமுக ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தன் மீதுள்ள பயங்கரமான ஊழல் வழக்குகளிலிருந்து விடுபடுவதற்கு வகை செய்யக் கூடிய ஒரு மாற்று ஆட்சியை மத்தியில் அமைப்பதற்கான சுயநலம் நிறைந்த மோசடி நோக்கத்துடனேயே வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்த்திடக் காரணமானார்.

பாஜக மீது கொள்கைரீதியான-மாறுபாடான கருத்துக்கள் இருந்தபோதிலும், ஜெயலலிதாவின் சதித் திட்டத்தில் அவர் வெற்றி பெற விடக்கூடாது என்ற நிலையினை திமுக எடுத்தது. அதன் பின்னரே பாஜகவுடன் திமுக சேர நேர்ந்தது.

இதையும் படிக்கவும்: துருக்கி; இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுமியை 80 மணி நேரம் போராடி மீட்ட இந்தியப் படை

அப்போது திமுக தலைவர் கருணாநிதி, “அரசியலில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டாலும், திமுக எப்போதும் போல் சிறுபான்மையினர்க்கு, தோழனாக-தொண்டனாக துணைவனாக-உயிரைக் கொடுத்து உதவும் பாதுகாவலனாக இருந்து தனது வரலாற்றுக் கடமையினை ஆற்றும்’ என்ற உறுதிமொழியினையும் வழங்கினார். முக்கியமான அந்த உறுதிமொழியினை பாஜக கூட்டணியில் சேர்ந்து திமுக, 1999 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்திட இருந்ததை ஒட்டி வெளியிடப்பட்ட “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுநோக்க ஆவணத்திலும்’ இடம் பெறச் செய்தார் கலைஞர்.பாஜகவும், திமுகவும் சமநிலையில் இருந்து அரசியல் உறவு பாராட்டி கண்ணியம் காத்தன. வாஜ்பாயும், கருணாநிதியும் எவ்வித வேறுபாடும் இன்றி உயர்ந்த நண்பர்களாகப் பழகினர்.

கடந்த சில ஆண்டுகளாக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் அதிமுக எந்த ஒரு தேர்தலிலாவது கருணாநிதி பெற்றதைப் போன்றதொரு உறுதிமொழியைப் பாஜகவிடம் இருந்து பெற்றதுண்டா? பொது நோக்க ஆவணம் வெளியிட்டதுண்டா? இல்லை; நிச்சயமாக இல்லை.

இபிஎஸ் எழுதிக் கொடுத்த அடிமைச் சாசனமும், டெல்லி-பாஜக கருவூலத்தில் பத்திரமாக இருக்கிறது. அடிமைக் கறையை உடம்பெல்லாம் பூசிக் கொண்டிருப்பவர். மற்றவர்களைப் பார்த்து ‘கறை, கறை’ என்று கத்துவதால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடப் போவதில்லை! என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.