மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டி கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், தலைசுற்றல் காரணமாக ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர் குழு அவரது உடல் நலனை முழுமையாக ஆராய்ந்து, ரத்தத்தில் அடைப்பை நீக்கும் சிகிச்சையை பரிந்துரைத்துள்ளது. அந்த சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ரஜினிகாந்த் நன்றாகத் தேறி வருகிறார். இன்னும் சில நாட்களில் மருத்துவமனையிலிருந்து அவர் வீட்டிற்குத் திரும்புவார் என்று தெரிவித்து இருந்தது. இந்நிலையில், ஐ.சி.யூவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள அவர், மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து நேரில் சென்று நலம் விசாரிப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காவேரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவர் ரஜினிகாந்தின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
https://twitter.com/Vairamuthu/status/1454649458461794304
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பதில், காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம் ரஜினியின் நலம் கேட்டேன். நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள் என் நிம்மதியை மீட்டெடுத்தன. உத்தமக் கலைஞனே, காற்றாய் மீண்டு வா, கலைவெளியை ஆண்டு வா, படையப்பா எழுந்து வா, பாட்ஷாபோல் நடந்து வா வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.







