முக்கியச் செய்திகள் தமிழகம்

தீபாவளிக்கு இறைச்சிக் கடைகளை திறக்க அனுமதி

தீபாவளியன்று இறைச்சிக் கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள் ளது.

தீபாவளிப் பண்டிகை வரும் 4- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள 20 ஆயிரத்து 334 பேருந்துகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்க இருப்பதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். நாளை முதல் 3ம் தேதி வரை, தினசரி இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன், 3 ஆயிரத்து 506 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து சென்னையிலிருந்து 9 ஆயிரத்து 806 பேருந்துகள் இயக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, தீபாவளி நாளான வரும் 4ம் தேதியன்று, மகாவீர் ஜெயந்தி விழாவும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகாவீரர் ஜெயந்தி நாளன்று இறைச்சிக் கடைகள் மூடப்படுவது வழக்கம். இத்தகைய சூழலில், பொதுமக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, தீபாவளி நாளன்று தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இறைச்சிக் கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளும், ஜெயின் மத வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள இறைச்சிக் கடைகளும் மூடப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

புகைப்பதை நிறுத்துவதால் இத்தனை நன்மைகளா?

Ezhilarasan

சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர்கள் – வைகோ கோரிக்கை

Jeba Arul Robinson

கிணற்றில் தவறிவிழுந்த முதியவர் 2 நாட்களுக்குப் பிறகு மீட்பு

Gayathri Venkatesan