முக்கியச் செய்திகள்

புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் கீதாஞ்சலிஸ்ரீக்கு வைரமுத்து ட்விட்டரில் வாழ்த்து

உலகப் புகழ்பெற்ற விருதான புக்கர் விருதை முதல்முறையாக இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ பெற்றுள்ளதையடுத்து, கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆங்கிலத்தில் எழுதப்படும் சிறந்த புதினத்திற்கு ஆண்டுதோறும் புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. சுமார் ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய இந்த விருது கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய சிவப்பு சமாதி என்ற புதினத்திற்கு கிடைத்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கீதாஞ்சலி இந்தியில் எழுதிய இந்த புதினம், டெய்சி ராக்வெல் என்பவரால் Tomb of Sand என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. 2022ஆம் ஆண்டுக்கான புக்கர் விருதுக்கு Tomb of Sand தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய பிரிவினையின்போது கணவரை பறிகொடுத்த வயதான பெண்மணி ஒருவரின் நிலை குறித்து இந்த புதினம் பேசுகிறது. டெல்லியைச் சேர்ந்த இந்தி எழுத்தாளரான கீதாஞ்சலி ஸ்ரீ, ஏராளமான சிறுகதைகளையும் 5 புதினங்களையும் எழுதியுள்ளார்.

இந்நிலையில், புக்கர் விருதை முதல்முறையாக இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ பெற்றுள்ளதையடுத்து, கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், இலக்கியத்தின் சர்வதேச விருதான புக்கர் விருது இந்திய மொழிகளுள் ஒன்றான இந்திக்குக் கிட்டியிருப்பது மகிழ்ச்சி தருகிறது Tomb of Sand படித்துவிட்டுக் கருத்துரைப்பேன். படைப்பாளி கீதாஞ்சலி ஸ்ரீக்கு என் இலக்கிய வாழ்த்தைத் தெரிவிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோவை சம்பவம் திட்டமிட்ட தாக்குதல்: ஆளுநர் ஆர்.என்.ரவி

G SaravanaKumar

மின் கட்டண உயர்வை கண்டித்து விரைவில் போராட்டம் – ஜி.கே.வாசன் அறிவிப்பு

EZHILARASAN D

புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி மையங்களை தமிழிசை தொடங்கி வைப்பு!

Gayathri Venkatesan