தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னிலை – மத்திய கல்வி அமைச்சகம்

மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய NAS சர்வேயில், கணிதப் பாடத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய NAS சர்வேயில், 3-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு…

மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய NAS சர்வேயில், கணிதப் பாடத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய NAS சர்வேயில், 3-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கணித பாடத்தில் 1,000 எண்கள் வரை எழுதவும், படிக்கவும் தெரிந்துள்ளது என்றும் தேசிய சராசரியைக் காட்டிலும் தமிழ்நாட்டு மாணவர்களின் கணித திறன் அதிகமாக உள்ளதாகவும் கூறியுள்ளது. அத்துடன் ஆங்கிலத்தை புரிந்துகொள்வதிலும், எழுதுவதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர்கள் தேசிய சராசரிக்கு இணையாக உள்ளனர் என்றும் அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

 

சமூக அறிவியல் பாடத்தில் வரலாற்று நிகழ்வுகள் குறித்த அறிவு திறன் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ள மத்திய கல்வி அமைச்சகம் ஆனால், 10-ம் வகுப்பு பயிலும் 85% மாணவர்களின் அடிப்படை அறிவியல் அறிவு தேசிய சராசரியை விட குறைவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் 5-ம் வகுப்பு பயிலும் 33% மாணவர்கள் மட்டுமே மொழிப்பாடத்தை எழுதவும், படிக்கவும் தெரிந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தேசிய சராசரியை விட குறைந்துள்ளது என்று மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய NAS சர்வேயில் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.