சிறார்களுக்கு தடுப்பூசி; தமிழ்நாட்டில் 73% நிறைவு

தமிழ்நாட்டில் 15 – 18 வயதுக்கு உட்பட்ட 73% சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாநிலம் முழுவதும் சிறப்பு பிரிவின் கீழ் இதுவரை 14.97…

தமிழ்நாட்டில் 15 – 18 வயதுக்கு உட்பட்ட 73% சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாநிலம் முழுவதும் சிறப்பு பிரிவின் கீழ் இதுவரை 14.97 லட்சம் நபர்களுக்கு கொரனோ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், வீடற்றவர்கள் என தமிழகத்தில் சிறப்புப் பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த சிறப்பு பிரிவின் கீழ் இதுவரை 14.97 (14,97,272) லட்சம் நபர்களுக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பிணி பெண்களுக்கு 6.27 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும், பாலூட்டும் தாய்மார்களுக்கு 4.98 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 3.66 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும், வீடற்றவர்களுக்கு 2 ஆயிரத்து 838 டோஸ் தடுப்பூசிகளும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,814 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.” என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல, “15 – 18 வயதுக்கு உட்பட்ட 73% சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 33,46,000 பேர் 15-18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் தடுப்பூசி செலுத்த தகுதி உடையவர்கள். இதில் 24,29,702 டோஸ் (73%) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிட்டது.” என தெரிவித்துள்ளது.

மேலும், “93.18 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தவில்லை. இவர்கள் போதுமான நாட்கள் கடந்தும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். முதல் தவணையாக கோவிஷீல்டு செலுத்திக்கொண்ட 78.33 லட்சம் பேரும், கோவேக்சின் முதல் தவணை செலுத்திக்கொண்ட 14.85 லட்சம் பேர் என மொத்தம் 93.18 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொல்லாமல் உள்ளனர்.” என சுகாதாரத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.