முக்கியச் செய்திகள் விளையாட்டு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்; 223 ரன்களுக்கு ஆல்அவுட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 223 ரன்களில் ஆட்டமிழந்தது இந்திய அணி.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நகரின் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா தொடக்கம் முதல் தடுமாறியது.

முதலில் களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் 12, 15 ரன்களுக்கு ஆட்டமிழக்க இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாரா, கோலி இணை நிதானமாக விளையாடினர்.

புஜாரா 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க ரஹானே 9 ரன்களிலும், ரிஷப் பண்ட் 27, அஸ்வின் 2, ஷர்துல் தாகூர் 12, பும்ரா 0, முகமது சமி 7 ரன்களுக்கு என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

நிதானமாக ஆடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 201 பந்துகள் ஆடி 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி இந்த முறையும் சதம் அடிக்கும் வாய்ப்பை பக்கத்தில் வந்து இழந்தார். உமேஷ் யாதவ் 4 ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

இதில் நிதானமாக ஆடிய கேப்டன் கோலி 201 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக உமேஷ் யாதவ் 4 ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

விக்கெட்டுகளை பொறுத்த அளவில், ரபாடா 4, மார்கோ ஜேன்சன் 3, ஆலிவியர், நிகிடி, கேஷவ் மகராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement:
SHARE

Related posts

தரமற்ற முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு: இபிஎஸ் குற்றச்சாட்டு

Arivazhagan CM

ஆகஸ்ட் 15ல் கொடி ஏற்றும்போது கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும்: தமிழிசை

Gayathri Venkatesan

தள்ளாத வயதிலும் தளராத 92 வயது முதியவர்; குவியும் பாராட்டுகள்!

Jayapriya