சாய்னா குறித்து அபாச கருத்து பதிவிட்டதையடுத்து அதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததால் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரினார்.
பஞ்சாப் மாநிலத்தில் பிரதமரின் வருகை மற்றும் பாதுகாப்பு குறித்து பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். திரைப்பட நடிகரான சித்தார்த், தனது ட்விட்டரில் சாய்னாவின் பதிவை குறிப்பிட்டு, அதை இரட்டை அர்த்தத்தில் கேலி செய்யும் விதமாக ரீட்வீட் செய்தார்.
அந்த பதிவு வைரலாகி பெரும் சர்ச்சைகளையும் கடும் எதிர்ப்புகளையும் உருவாக்கியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சாய்னா நேவாலின் தந்தை, தனது மகள் தாய் நாட்டிற்காக பதக்கங்களை பெற்று கொடுத்துள்ளார் என்றும் நடிகர் சித்தார்த் தாய் நாட்டிற்காக என்ன செய்தார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையே, சாய்னா நேவால் குறித்து அவதூறு பரப்பிய சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்குமாறு மகாராஷ்டிரா மாநில அரசுக்கு தேசிய பெண்கள் ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது.
Dear @NSaina pic.twitter.com/plkqxVKVxY
— Siddharth (@Actor_Siddharth) January 11, 2022
இந்த பதிவால் கடும் சர்ச்சையில் சிக்கியிருப்பதை அறிந்து, தற்போது மன்னிப்பு கடிதம் ஒன்றை சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ’தான் இரட்டை அர்த்தத்தில் கேலி செய்யும் விதமாக ரீவ்வீட் செய்தது தவறு எனவும். சாய்னாவின் பதிவை பார்த்து ஏமாற்றம் அடைந்து அதை நான் செய்ததிருந்தாலும், அது ஏற்கத் தகுந்த காரணம் அல்ல. மேலும், தனது பதிவில் எந்தவித பாலின பாகுபாடும் இல்லை’ எனவும் கூறியிருக்கிறார்.
தற்போது தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் குறித்து, அவதூறாக கருத்து பதிவிட்டதாக மீண்டும் ஒரு குற்றச்சாட்டில் இவர் சிக்கியுள்ளார். அவரது இந்த பதிவு சட்டத்திற்கு புறம்பாக இருப்பதாகவும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும், தமிழ்நாடு காவல்துறைக்கு தேசிய பெண்கள் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement: