மே-1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளநிலையில் அதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,60,960 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் தலைநகர் டெல்லியில் மக்களை கொரோனா சூறையாடி வருகிறது
இதனால் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள படிப்படியாக வயது அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் மே1ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அவ்வாறு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு தொடங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.







