முக்கியச் செய்திகள் இந்தியா

சோனு சூட் செல்போனுக்கு உதவி கேட்டு குவியும் மெசேஜ்கள்!

கொரோனாவில் இருந்து சமீபத்தில் மீண்டு வந்துள்ள நடிகர் சோனு சூட்டிடம் உதவிகள் கேட்டு, ஏராளமானோர் குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கிறனர். இதுபற்றிய வீடியோவை ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ளார்.

கொரோனா காரணமாக, சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதற்கான உதவிகளை நடிகர் சோனு சூட் செய்தார். அந்த தொழிலாளர்களுக்காக வேலைவாய்ப்புத் தளம் ஒன்றையும் ஆரம்பித்துள்ள நடிகர் சோனு சூட், கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

சோனு சூட் செய்த நல உதவிகளைப் பாராட்டி அவருக்குப் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அவர் உருவத்தை விமானத்தில் பதித்து கவுரவித்திருந்தது. இந்நிலையில் தொடர்ந்து உதவி கேட்டு, தனக்கு ஏராளமான அழைப்புகள் வருவதாக சில நாட்களுக்கு முன் அவர் தெரிவித்திருந்தார்.

’இந்தியா முழுவதும் இருந்து மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள், ஊசிகள் என ஏராளமான அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. பலருக்கு என்னால் உதவ முடியவில்லை. தயவு செய்து வீட்டில் இருங்கள். முகக் கவசம் அணியுங்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சோனு சூட் இப்போது மீண்டுள்ளார்.

அவர் தனது செல்போனுக்கு உதவிகள் கேட்டு தொடர்ந்து மெசேஜ்கள் வந்துகொண்டிருப்பதாகக் கூறி அந்த வீடியோவை ட்விட்டரில் இப்போது வெளியிட்டுள்ளார்.

‘உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறோம். அதில் தாமதமோ, தொடர்பு கொள்ள இயலாத நிலையோ ஏற்பட்டால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

யார் இந்த பவானி தேவி?

புகழ் பெற்ற FitBit நிறுவனத்தை வாங்கியது கூகுள்!

Saravana

சுல்தான் பட டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Saravana Kumar