உழவர் சந்தைகள் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
தாவரங்கள் பற்றி குழந்தைகள் அறிந்து கொள்ள ஊரகப் பகுதிகளில் 12 வகை காய்கறி விதைகள் அடங்கிய 2 லட்சம் விதைகள் மானியத்தில் வழங்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் 100 ஹெக்டேர் பரப்பில் கீரை சாகுபடி மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிக்க மானியம்.
காய்கறிகளை குறைவாக சாகுபடி செய்யக்கூடிய 2,000 கிராமங்களில் மண் வளத்தை மேம்படுத்தி 1250 ஹெக்டேர் பரப்பில் காய்கறி பயிரிட மானியம்.
முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டம் 114 கோடி ரூபாய் செலவில் ஒன்றிய – மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
உழவர் சந்தைகள் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படும்.
உழவர் சந்தைகளில், கழிவுகளை உரமாக்கி ‘காய்கறி கழிவு உரம்’விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சை, நெல்லை, கரூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சிறிய அளவில் 10 உழவர் சந்தைகள் 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.








