தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்பு பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை: வேளாண் அமைச்சர்

தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்பு பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அதன் முக்கிய…

தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்பு பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்படும்.

சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் 30 நடமாடும் காய்கறி அங்காடிகள் வாங்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு 40% மானியம் அல்லது 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

ஒட்டன்சத்திரம், பண்ருட்டி ஆகிய 2 இடங்களில் குளிர்பதன கிடங்குகள் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்பு பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை.

கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரிசி போன்ற சிறப்பு விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை எடுக்கும்.

தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த நடப்பு நிதியாண்டில் அதற்கென தனி அமைப்பு ஒன்று வழங்கப்படும்.

மீன் பதப்படுத்துதலுக்கு நாகை, தேங்காய்க்கு கோவை, வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறுதானியங்களுக்கு விருதுநகர் என 5 தொழில் கற்கும் மையங்கள் தொடங்க நடவடிக்கை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மஞ்சள் பயிருக்கு என ஆராய்ச்சி மையம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும். இதற்கென ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.