உத்திரமேரூர் அருகே மானாம்பதி வானசுந்தரேஸ்வரர் கோயில் மாசிமக உற்சவத்தையொட்டி ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் மானாம்பதி ஸ்ரீவான சுந்தரேஸ்வரர் கோயில் மாசி மகம் உற்சவம் நடைபெற்றது. உற்சவத்தின் போது, வாகன மண்டபத்தில் நள்ளிரவு முதல் சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதிகாலை 4 மணிக்கு மகாதீப ஆராதனையும் வானவேடிக்கையும் நடைபெற்றது. 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி நடத்தும் இந்த திருவிழாவில் மானாம்பதி கூட்டுச் சாலையில் வானசுந்தரேஸ்வரர் எழுந்தருளினார்.
அங்கு பெருநகர், தண்டரை, நெடுங்கல், அகஸ்திப்பா நகர், வீசூர் உள்ளிட்ட 30 ஊர்களை சேர்ந்த சாமிகள் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த திருவிழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவை முன்னிட்டு எந்த அசம்பாவிதம் சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க 60க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.







