உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு வேறு இடத்துக்கு கொண்டு செல்லும் பணியில் அம்மாநில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதால் பலர் தங்களை வீடுகளை விட்டு வேறு இடத்துக்கு சென்றுள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டதில் உள்ள நகரம் ஜோஷிமத். இமயமலைக்கு செல்பவர்களுக்கு இந்த நகரம் நுழைவு வாயிலாக உள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக இந்த நகரத்தில் நிலச்சரிவும், நில வெடிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் விரிசல் விழத் தொடங்கியுள்ளன. மேலும் கோயில் சரிந்து மண்ணில் புதைந்துவிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுமார் 600 கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளன. இதுவரை 70 குடும்பங்கள் மீட்கப்பட்டு வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் 90 குடும்பங்களை வெகு சீக்கிரமாக பத்திரமாக மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் அதிக குளிர் நிலவுவதால் இவர்களை மீட்கும் பணி அதிகாரிகளுக்கு சவாலாக இருந்து வருகிறது.
இதற்கிடையே நிலச்சரிவு ஏற்பட்டுள்ள ஜோஷிமத் பகுதியை பேரிடர் பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இரண்டு குழுக்கள் அப்பகுதியை ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
பருவநிலை மாற்றம் , மலைப் பகுதியில் தொடர்ச்சியான கட்டுமான பணிகள் நடைபெறுவதே நிலச்சரிவுக்கு காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.