24 வருடத்துக்குப் பிறகு திறக்கப்பட்ட லிஃப்டில் மனித எலும்புக்கூடு!

24 வருடங்களாக செயல்படாமல் இருந்த, மருத்துவமனை லிஃப்டில், மனித எலும்புக் கூடு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ளது கைலி. இங்கு அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. 1991…

24 வருடங்களாக செயல்படாமல் இருந்த, மருத்துவமனை லிஃப்டில், மனித எலும்புக் கூடு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ளது கைலி. இங்கு அரசு மருத்துவமனை
ஒன்று உள்ளது. 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையின் ஒரு லிஃப்ட்
1997 ஆம் ஆண்டு முதல் செயல்படவில்லை. இதனால் யாரும் அந்த லிஃப்டை பயன்படுத்த வில்லை. அது பூட்டியே கிடந்தது.

இந்நிலையில் 24 வருடங்களுக்குப் பிறகு கடந்த 1 ஆம் தேதி, ரிப்பேர் வேலைக்காக அந்த
லிஃப்டை திறந்து பார்த்தனர். அப்போது, லிஃப்டுக்கு அடியில் மனித எலும்புக் கூடு ஒன்று
கிடந்தது. இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த அவர்கள், அந்த எலும்புக் கூடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அது ஆண் எலும்புக்கூடு என்பது தெரியவந்துள்ளது.

அவர் யார்? உள்ளே மூச்சுத்திணறி இறந்தாரா? அல்லது யாராவது கொலை செய்து அவரை
இங்கு கொண்டு போட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர். அதோடு கடந்த 24 வருடங்களில் அந்தப் பகுதியில் யாரும் காணாமல் போயிருக் கிறார்களா என்பது பற்றிய விவரங்களையும் அவர்கள் சரிபார்த்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.