முக்கியச் செய்திகள் விளையாட்டு

டெஸ்ட்டில் 100 விக்கெட்டை வேகமாக வீழ்த்தி பும்ரா அபாரம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டை வீழ்த்திய இந்திய வேகப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் பும்ரா.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. இதில், முதல் இன்னிங்சில் இந்திய அணி, 191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தன. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 466 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ரோகித் சர்மா அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 127 ரன்களும் புஜாரா 61 ரன்களும் ஷர்துல் தாகூர் 60 ரன்களும் ரிஷப் பண்ட் 50 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் 2 வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது. ஹசீப் ஹமீத் (43 ரன்), ரோரி பர்ன்ஸ் (31 ரன்) களத்தில் இருந்தனர்.

இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. அரைசதம் அடித்த நிலையில் பர்ன்ஸ் விக்கெட்டை ஷர்துல் தாகூர் வீழ்த்தினார். அடுத்த வந்த மலான் ரன் அவுட் ஆக, பின்னர் கேப்டன் ஜோ ரூட் வந்தார். இதற்கிடையே சிறப்பாக ஆடி வந்த ஹசீப்பை, ஜடேஜா போல்டாக்கினார்.

அடுத்த வந்த ஒலி போப், பேர்ஸ்டோ ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பும்ரா வீழ்த்த, மொயில் அலி விக்கெட்டை ஜடேஜா தூக்கினார். இதையடுத்து 72 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து அந்த அணி 149 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

இதற்கிடையே ஒலி போப், விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100 விக்கெட்டை பதிவு செய்தார் இந்திய வீரர் பும்ரா. இதன் மூலம் விரைவாக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் பெற்றுள் ளார். இவர் 24 டெஸ்ட் போட்டிகளில் நூறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக, கபில்தேவ் 25 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்திருந்தார்.

சுழற்பந்து வீச்சாளர்களில் அஸ்வின் 18 டெஸ்ட் போட்டிகளிலேயே நூறு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் – கே.என்.நேரு

Jeba Arul Robinson

“சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை!” – மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்

Jeba Arul Robinson

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான டோக்கன் வழங்கும் பணி தீவிரம்!

Jayapriya