டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ’மின்னல் முரளி’ திரைப்படம் நெட்பிளிக் ஸில் வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
பிரபல மலையாள ஹீரோ, டோவினோ தாமஸ். இவர் தமிழில், தனுஷின் ’மாரி 2’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். பாசில் ஜோசப் இயக்கத்தில் இவர் நடித்துள்ள படம், ’மின்னல் முரளி’. இதில் குரு சோமசுந்தரம், அஜு வர்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன், பைஜூ சந்தோஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
சூப்பர் ஹீரோ பாணியில் உருவாகி இருக்கும் மலையாளப் படமான இது, பெரும் பொருட் செலவில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி யுள்ளது. படத்தில் மின்னல் தாக்குவதால் அவருக்கு சூப்பர் பவர் கிடைக்கிறது. அதைக் கொண்டு அவர் என்ன செய்கிறார் என்பது படத்தின் கதை.
இந்தப் படத்தைத் திரையரங்கில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேரடியாக நெட் பிளிக்சில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
டோவினோ தாமஸ் கூறும்போது, இந்த படத்தின் ஆரம்ப கட்டத்திலேயே அந்த கதாபாத் திரத்துடன் ஒன்றிப் போய் விட்டேன். இப்படத்தின் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன். சிறப்பான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு புதுவித அனு பவத்தைக் கொடுக்கும் என்றார்.









