நெடுஞ்சாலைத்துறை கட்டுமானப் பணிகளில் மணலுக்கு மாற்றாக எம்.சாண்டை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை கட்டுமானப் பணிகளில் மணலுக்கு மாற்றாக எம்.சாண்டை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவுடன் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் முன் வைத்த 22 கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டதாகக் கூறினார். அந்தக் கோரிக்கைகளை முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு சென்ற பின் உரிய அறிவிப்புகள் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.