விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா – போபண்ணா இணை 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர், இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த சானியா மிர்சா – ரோகன் போபண்ணா இணை இங்கிலாந்தின் எய்டன் மெக்ஹ்யூக் – எமிலி வெப்லி ஸ்மித் இணையை எதிர்கொண்டது.
இந்த போட்டியில், தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சானியா – போபண்ணா இணை, 6-3, 6-4 என்ற நேட் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 3வது சுற்றில் ஸ்லோவேனியாவின் ஆந்த்ரேஜா, நெதர்லாந்தின் ரோஜர் இணையை எதிர்கொள்ளும் சானியா மிர்சா – போபண்ணா இணை, இந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறும்.







