பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2,601 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளிடமிருந்து 1,975 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 7,74,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மெரீனா கடற்கரையில் செப்டம்பர் 14 முதல் 21ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் 272 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 14 கடை உரிமையாளர்களிடமிருந்து 11 கிலோகிராம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 2,600 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மெரினா கடற்கரைப் பகுதியில் குப்பைத் தொட்டி வைக்காத கடை உரிமையாளர்கள் மற்றும் குப்பைகளைக் கொட்டிய பொதுமக்களுக்கு ரூ. 3,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் செப்டம்பர் 14 முதல் 20ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் 245 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 30 கடை உரிமையாளர்களிடம் இருந்து 3 கிலோகிராம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 3,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், குப்பைத் தொட்டி வைக்காத கடை உரிமையாளர்கள் மற்றும் குப்பைகளை கொட்டிய பொதுமக்களுக்கு ரூ. 3,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.








