நெகிழிக்கு மாற்றாகும் மஞ்சப்பை; சுப்ரியா IAS-ன் சூப்பர் ஐடியா!

தமிழக மக்களுக்கு அளவில்லா நன்மைகளை தரும் வனத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பிளாஸ்டிக்கை விட ஆபத்தான எதிரி இருக்க முடியாது. பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து பாரம்பரிய மஞ்சப்பைக்கான முன்னெடுப்பு தொடங்கியுள்ள நிலையில் அதற்கான காரணம் குறித்து இந்த…

தமிழக மக்களுக்கு அளவில்லா நன்மைகளை தரும் வனத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பிளாஸ்டிக்கை விட ஆபத்தான எதிரி இருக்க முடியாது. பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து பாரம்பரிய மஞ்சப்பைக்கான முன்னெடுப்பு தொடங்கியுள்ள நிலையில் அதற்கான காரணம் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்

உதகையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வனத்தை அதிகப்படுத்தும் நோக்கில் ஒரே நேரத்தில் 43 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. அன்று உருவான கின்னஸ் பூங்கா இன்று வரை பேசப்படும் நிலையில் அதற்கான அடித்தளம் இட்டது யார் என்ற கேள்வியும் நம்முள் எழும். அவர் வேறு யாருமில்லை தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு IAS தான். 2002 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்ட ஆட்சியராக சுப்ரியா சாகு பணியாற்றிய போது உருவானது தான் அந்த கின்னஸ் பூங்கா.

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்து 1991 ஆம் ஆண்டு ஐ ஏ ஏஸ் தேர்ச்சி பெற்று பணிக்கு சேர்ந்த சுப்ரியா சாகு, கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர், தூர்தசன் தலைமை இயக்குனர் என மாநில மற்றும் மத்திய அரசுகளில் இவர் வகித்த பதவிகள் ஏராளம். இன்கோசர்வ் தலைமை செயல் இயக்குனராக பணியாற்றிவந்த சுப்ரியா சாகு, திமுக ஆட்சி அமைந்த பிறகு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் முதன் முதலில் பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்தை 2000 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் முக்கிய மலைப்பகுதியான நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் சுப்ரியா சாகு தான் அறிமுகப்படுத்தினார். சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் பாலிதீன் பைகளை மலைப்பகுதிகளில் வசிக்கும் விலங்குகள் உண்பதை கண்டதோடு, காட்டு யானை ஒன்றின் பிரேத பரிசோதனையின் போது அதன் வயிற்றில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை கண்ட சோகமான நிகழ்வே சுப்ரியா சாகுவின் பிளாஸ்டிக் ஒழிப்பு முன்னெடுப்பிற்கான உந்து சக்தியாக அமைந்துள்ளது.

சுப்ரியா சாகுவால் தொடங்கப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு பின்னாளில் மக்கள் இயக்கமாகவே உருவெடுத்தது.
பிளாஸ்டிக்கை தவிர்த்து மஞ்சள்பையை பயன்படுத்துமாறும் பொதுமக்களுக்கு சுப்ரியா சாகு அறிவுருத்தினார். அதன் மூலம் மஞ்சள் பை தயாரிப்பு, நீலகிரி மாவட்ட பெண்களுக்கான வேலைவாய்ப்பையும் உருவாக்கியது.
பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரப்படுத்த அபராதத்தை விதிக்கும் சில கடுமையான உத்தரவுகளையும் அமல்படுத்திய சுப்ரியா சாகுவுக்கு கை மேல் பலன் கிடைத்தது.

தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டிருக்கிறதென்றால் அதற்கான விதை போட்டது சுப்ரியா சாகு என்றே சொல்லலாம். மரங்களை வளர்த்தால் வனம் செழிக்கும் என்ற தாரக மந்திரத்துடன் இன்றுவரை செயல்பட்டு வரும் சுப்ரியா சாகு ஐ ஏ எஸ் மீண்டும் மஞ்சள்பையை மக்களுக்கு நினைவுபடுத்தியிருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.