அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது – அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். தொடர்ந்து உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்தார்.

இதன் காரணமாக அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

உலக நாடுகளின் மீது அமெரிக்காவின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வரிகளை விதிப்பதற்கு அதிபர் டிரம்புக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது எனக்கூறிய அமெரிக்க உச்சநீதிமன்றம், அவர் விதித்துள்ள வரிகள் செல்லாது என உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்க கீழமை நீதிமன்றம் அதிபர் டிரம்ப் விதிக்கும் வரிகள் அனைத்தும் சட்டவிரோதமானவை எனக்கூறி கடந்த ஆண்டு மே மாதம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.