அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜி20 மாநாட்டில் கண்டிப்பாக கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 அமைப்புக்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. ஜி-20 குழுவின் 18வது மாநாடு வரும் செப்டம்பர் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனேசி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் கிஷிடா உள்ளிட்டோா்மாநாட்டில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அவரது மனைவிக்கும் கோவிட் தொற்று உறுதியானதால் அவர் மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு இல்லை என செய்திகள் வெளியானது.
ஆனால் ஜி20 மாநாட்டில் பைடன் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் கோவிட் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது :
“ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக அதிபர் டெல்லி செல்கிறார். பிரதமர் மோடியை சந்திக்கும் அவர் ஜி20 மாநாட்டின் அதிகாரப்பூர்வ அமர்வுகளில் பங்கேற்கிறார் என தெரிவித்துள்ளார்.







