ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை தொடரின் 6வது லீக் ஆட்டத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் களமிறங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 37.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் ஆப்கானிஸ்தானை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி, சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. இலங்கையுடனான தோல்வியை அடுத்து ஆசிய கோப்பை தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி வெளியேறியது.