இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்கு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்பு

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துகொள்ள உள்ளார். பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். எலிசபெத் ராணியின்…

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துகொள்ள உள்ளார்.

பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். எலிசபெத் ராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராணி எலிசபெத் மறைவுக்கு அமெரிக்க அதிபர் பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத் ஒரு சகாப்தத்தினை வரையறுத்தவர். ஒரு சிறந்த பெண்மணி என்று அவர் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து, பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் இருவரும் வாஷிங்டன் நகரில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் உள்ள இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டனர்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் பைடன், இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வீர்களா? என கேள்வி எழுப்பியதற்கு ஆம். அடுத்த என்ன என்ற விவரங்கள் எதுவும் எனக்கு தெரியாது. ஆனால் நான் செல்வேன் என பதில் கூறினார். மேலும், நான் இன்னும் அரசர் சார்லஸிடம் பேசவில்லை. அவரை நான் அறிவேன். அவரிடம் இன்னும் தொடர்பு கொள்ளவில்லை என கூறினார்.

இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத்தின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் பற்றி இங்கிலாந்து அரண்மனை தகவல் தெரிவித்த பின்னர், அதில் கலந்து கொள்வது பற்றி அறிவிக்க பைடன் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.