முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

திடீர் பயணமாக உக்ரைன் சென்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்றுள்ளார்.

அமெரிக்காவில் நேட்டோ படையில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி தொடங்கிய போர் ஒரு வருடத்தை எட்டவுள்ளது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு வகைகளில் உதவி செய்து வருகின்றன. போரின் இடையே உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி அமெரிக்க சென்று ஜோ பைடனை நேரில் சந்தித்து பேசினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார்.  உக்ரைனுக்கு அவர் சென்றுள்ள தகவல் ரகசியமாக வைக்கப்பட்டது. உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜோ பைடன் பார்வையிட்டார். மேலும் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அண்மைச் செய்தி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி போராட்டம்

இதுதொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் முதலில் பைடன் போலந்து செல்ல திட்டமிட்டு இருந்தார். எதிர்பாராவிதமாக முதலில் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றடைந்தார்.. உக்ரைன் மீது ரஷ்யா மீது தாக்குதல் நடத்தில் ஓராண்டு ஆகும் நிலையில் பைடன் சென்றுள்ளார் என்று கூறப்பட்டிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மின்கட்டணம் உயர்வு; விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

G SaravanaKumar

துரித கதியில் பாதாள சாக்கடை பணிகள் – திருச்சி மக்கள் வரவேற்பு

Jayakarthi