முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

பிரேசிலில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழப்பு

பிரேசிலின் தென்கிழக்கு கடலோரப் பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலில் சாவ் பாலோ மாகாணத்தில் கடலோரப் பகுதிகளில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து தென்கிழக்கு பிரேசில் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சாவ் பாலோ மாகாணத்தில் குளிர்கால திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சாவ் பாலலோ, இல்ஹபேலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை பெய்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த கனமழையால் சில இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு,  50 -க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.  இதுவரை 300க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் மாயமாகியுள்ளதாகவும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி அங்கு தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்தாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 60 செ.மீ மழை பெய்துள்ளதாகவும், மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிரேசிலின் வடகிழக்கில் உள்ள பாஹியா மாநிலத்தில் குளிர்கால திருவிழாவைக் கொண்டாடிய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, பாதிக்கப்பட்ட முக்கிய பகுதிகளுக்குச் செல்ல உள்ளார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் கிராமியக் கலை நிகழ்ச்சிகள்

Arivazhagan Chinnasamy

தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம் – சீமான் எச்சரிக்கை

EZHILARASAN D

போலி ஆப்கள்; மக்களே உஷார்

Halley Karthik