முக்கியச் செய்திகள் உலகம்

பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்

பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னுக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். தாய் ஹீராபென்னை நேரில் சென்று பிரதமர் மோடி சந்தித்த நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில், அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹீராபென் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து குஜராத்திற்கு விரைந்த பிரதமர் மோடி காந்திநகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தனது தாயாருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரை பிரதமர் மோடி தனது தோளில் சுமந்து சென்று காந்தி நகர் மயானத்தில் தாயாரின் சிதைக்கு தீமூட்டி இறுதிசடங்கு செய்தார்.

பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்விட்டரில் தனது இரங்கலை தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு ஜில்லும், நானும் ஆழ்ந்த மற்றும் உள்ளார்ந்த உணர்வு சார்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம். இந்த கடினமான சூழலில் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக நாங்கள் பிரார்த்தனை செய்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மமதாவுக்கு எதிராக களமிறங்கும் திரிணாமூல் முன்னாள் அமைச்சர்!

Halley Karthik

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு செல்ல முயன்ற 12 பேர் கைது

G SaravanaKumar

தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் பெண் சடலம் மீட்பு

EZHILARASAN D