பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் சீன பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையை நடத்த உத்தரவிட்டுள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு முதலில் சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து தான் முதல் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் அந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. சீனாவில் ஒரு நாளில் 49 லட்சம் முதல் 53 லட்சம் வரை புதிய கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய வகை கொரோனா ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது.
இதையடுத்து இந்தியா, இத்தாலி, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் சீன பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையை நடத்த உத்தரவிட்டுள்ளன.
சீனாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு பிரெஞ்சு மக்களை பிரான்ஸ் அரசு வலியுறுத்தி உள்ளது. சீனாவிலிருந்து பிரான்ஸ் செல்லும் விமானங்களில் பயணிப்போர் முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸ் மாறுபாடுகளை அடையாளம் காண சீன பயணிகளுக்கு விமான நிலையங்களில் பிசிஆர் சோதனை நடத்தப்படுவதாக பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் ஸ்பெயின் நாட்டிற்கு வரும் சீன பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.